சரசரவென சரியும் கச்சா எண்ணெய் விலை..!
கச்சா எண்ணைய் விலை, வரலாறு காணாத சரிவை நோக்கி செல்கிறது. டிரம்ப் அளித்த உறுதியை அடுத்து நேற்று ஒரளவு மீண்ட விலை இன்று அடியோடு குறைந்தது.
பிரென்ட் கச்சா எண்ணைய் 2 புள்ளி 7 சதவிகிதம் குறைந்து பேரலுக்கு 29 புள்ளி 11 டாலராக விற்பனையானது. அமெரிக்க கச்சா எண்ணெய் 5 புள்ளி 7 சதவிகிதம் குறைந்து 23 புள்ளி 88 டாலராக சரிவை சந்தித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவிலான எண்ணெய் நுகர்வு பலமடங்கு குறைந்துள்ளது. இதை அடுத்து தினசரி ஒன்றரை கோடி பேரல் அளவுக்கு உற்பத்தியை குறைக்கும் நோக்கில் சவூதி தலைமையிலான ஓபெக் நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இந்த நிலையில் இருதரப்பும் போட்டி போட்டு கொண்டு உற்பத்தி செய்வதால் கச்சா எண்ணெய் விலை பாதாளத்தை நோக்கி செல்கிறது.
Comments