உ.பி.யில் மேலும் 172 பேருக்கு கொரோனா உறுதி என தகவல்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏற்கெனவே 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில், அந்த மாநிலத்தில் மேலும் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரில் 42 பேர், டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா உறுதியானோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Comments