கொரோனா சிகிச்சை வார்டில் 3 தானியங்கி ரோபோக்கள் அறிமுகம்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா வார்டில் 3 தானியங்கி ரோபாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ரோபோக்களை தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவையான உணவு குடிநீர் மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்லும்படி ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விஜயபாஸ்கர் கூறினார்.
Propeller techno என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த 3 ரோபோக்களுக்கு Zafi, zafing bo, zafing medic என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Comments