குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

0 1946

குவைத் நாட்டில் 24 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கொரோனாவின் தடம் விரிவடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது.

இதில் 24 இந்தியர்கள், பங்களாதேஷை சேர்ந்த 2 பேர், ஒரு நோபாளி அடங்குவர். இந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் விளைவாக ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு மன்னிப்பு வழங்கியுள்ள குவைத் அரசு, அபாரதம் மற்றும் விமானக் கட்டணமின்றி நாட்டை விட்டு வெளியேறலாம் என்று சலுகை அறிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவுடன் (Sheikh Sabah Al-Khaled Al-Hamad Al-Sabah) பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments