கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு மு.க.ஸ்டாலின் உதவிகள்

0 2549

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.

6வது மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த ஏழு நாட்களாக மு.க.ஸ்டாலின் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய காலைச் சிற்றுண்டியை அவர் நேரடியாக வழங்கியதோடு, பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

ஊரடங்கினால் அவதிக்குள்ளாகியிருக்கும் வெளி மாநில மக்களுக்கு உதவிகள், 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், மளிகைக் கடையில் பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு, 'சமூக இடைவெளியின்' அவசியத்தை வலியுறுத்தினார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின் சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்ததோடு, முகக்கவசங்கள், சானிடைசர்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments