சத்தீஸ்கரில் பிறந்த இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

0 3181

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதி, தங்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்டுள்ளனர்.

கொரோனா வைரசும், அதனால் ஏற்படும் கோவிட்-19 நோயும் உயிர்களை பலி கொண்டு உலகையே அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி இரவு ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ப்ரீத்தி வர்மா என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் அவர் பெயரிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அந்த தம்பதி, பணி நிமித்தமாக ராய்ப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

ஊரடங்கால் எதிர்கொண்ட சிரமங்களை குறிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டியதாக ப்ரீத்தி வர்மா தெரிவித்துள்ளார். பின்னாட்களில் மனமாற்றம் ஏற்பட்டால் குழந்தைகளின் பெயரை மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments