தானியங்கி வென்டிலேட்டர் தயாரிக்க விப்ரோ 3D நிறுவனத்துடன் உடன்பாடு
அவசரக்காலத் தானியங்கி வென்டிலேட்டர் அமைப்பைத் தயாரிக்கத் திருவனந்தபுரம் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப மையம், விப்ரோ 3D நிறுவனத்துடன் உடன்பாடு செய்துள்ளது.
மூச்சிழுக்கச் சிரமப்படுவோருக்கு மூச்சின் அளவு குறைவதற்கு ஏற்ப செயற்கைச் சுவாசம் அளிக்க மனிதரால் இயக்கப்படும் கருவியைத் திருவனந்தபுரம் ஸ்ரீசித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப மையம் கண்டுபிடித்துள்ளது.
கொரோனா நோயாளியின் அருகில் இருப்போருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதால் தானியங்கி முறையில் இதைச் செயல்படுத்தத் தொழில்நுட்ப உதவியைக் கோரியிருந்தது.
பெங்களூரில் உள்ள விப்ரோ 3D இதற்கு ஒப்புக்கொண்டு ஒருவாரக் காலத்துக்குள் இதற்கான அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பை மருத்துவமனைகளில் சோதனை செய்து பார்த்தபின் தானியங்கி வென்டிலேட்டர் தயாரிப்பு தொடங்கும் என அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
Comments