மருத்துவக் குழுவினர் மீது கல்வீசித் தாக்கிய வன்முறையாளர்கள்

0 3332

மத்தியப் பிரதேசம் இந்தூரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இரவு பகலாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கல்வீசித் தாக்குதல்.

நடத்தி வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மருத்துவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கொரோனா பரவல் ஆய்வு மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் மீது குறை கூறி வன்முறையை சிலர் தூண்டிவிட்டதில் மருத்துவர்கள் மீது கல்வீசித் தாக்கிய கும்பல் அவர்களை ஓட ஓட விரட்டியது.

போலீசார் தலையிட்டு மருத்துவர்களை மீட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments