கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அகதிகள் எல்லை தாண்டி செல்வதில் கடும் சிரமம்

0 1372

கொரோனா வைரஸ் காரணமாக லத்தீன் அமெரிக்கா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அகதிகள் எல்லைத்தாண்டி செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு சிலியில் பொலிவியாவை சேர்ந்த ஒரு குழுவினர் எல்லைப்பகுதி அருகே முகாமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிவியாவிலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளான தனிமைப்படுத்துதல், எல்லைகளை மூடுதல் உள்ளிட்டவை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் பனாமா எல்லைக்கருகில் உள்ள கொலம்பிய நகரமான நிகோக்லியில் சுமார் 300 அகதிகள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பனாமா வழியாக அமெரிக்கா செல்லமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

ஆனால் பனாமாவும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments