15ம் தேதி முதல் ரயில் மற்றும் விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கியது
இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிந்ததும் நள்ளிரவு முதல் ரயில் மற்றும் விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இதுவரை உள்நாட்டு விமானங்களின் முன்பதிவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்து இந்தியாவில் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள வெளிநாட்டவரை வெளியேற்றுவதற்காக 18 சர்வதேச விமானங்களும் இயக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 22ம் தேதி சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைக்குப் பின்னர் விமானங்களை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கொரோனா பாதிப்பு இல்லாத, பாதுகாப்பான நாடுகளுக்கு மட்டும் படிப்படியாக விமான சேவைகள் சரி செய்யப்படும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் பி.எஸ்.கரோலா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Comments