ஊரடங்கால் 500 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த தமிழக மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணம்

0 14665

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழகத்தை நோக்கி 500 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. பாலசுப்பிரமணி லோகேஷ் என்ற 23 வயது மாணவர் நாக்புர் அருகே உள்ள வார்தாவில் உணவுப் பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உண்ண உணவு கூட கிடைக்காமல் தவித்த அவர் தமது 29 சகாக்களுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டார்.

1300 கிலோமீட்டர் தூரம் உள்ள தமது ஊருக்கு நடந்தே ஊர் திரும்ப லோகேஷ் முடிவெடுத்தார். 9 நாட்களாக நடந்து வந்த அவர்கள் வழியில் கிடைத்த லாரி போன்ற வாகனங்களிலும் சிறிது தூரம் கடந்து வந்தனர்.

ஆனால் ஹைதராபாத் அருகே செகந்தராபாத் வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது லோகோஷ்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments