கொரோனா வைரஸ் தொற்று பரவலில், தமிழகம் 2 வது கட்டத்தில் உள்ளது

0 3256

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 17 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன என்றும் இந்த வாரத்தில் கூடுதலாக 6 கொரோனா பரிசோதனை லேப்புகள் இணைக்கப்படும் என்றும் கூறினார்.

டெல்லி சென்று வந்து கொரோனா உறுதியானோர் 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது என்றார்.

கொரோனா பரவல் சமுதாய தொற்றாக மாறாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறிய பீலா ராஜேஷ் இது நமக்கு ஒரு சவாலான பணி என்றும் இதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவல் 2ஆம் நிலையில் உள்ளது என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments