உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53000 ஆனது

0 2701

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து, நொடிக்கு நொடி உயிரிழப்பு உயர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி, சீனாவின் வூகான் நகரில் நிமோனியா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் குறித்து 280 பக்கம் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் 27 பேர் உயிரிழந்ததாக முதன் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 100 நாட்கள் நகர்வதற்குள் இந்த கொரோனா வைரஸ் உலகத்தின் தலையெழுத்தையே தலைகீழாக புரட்டி விட்டது.

203 நாடுகளில் பரவிய இந்த தொற்றுநோய்க்கு இதுவரை 53 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தகவல் அறிய : https://google.com/covid19-map/?hl=en

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments