பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

0 29267

மும்பையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரசவம் நடந்த மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பை செம்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வார்டிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளானவரையும் அனுமதித்த மருத்துவமனை நிர்வாகம், அந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அவர்களை காலி செய்ய வற்புறுத்தியதோடு, சிகிச்சையளிக்கவும் யாரும் வராத நிலையில் தான் கொரோனா நோயாளி தங்களுக்கருகில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தங்கள் சொந்த செலவில் பரிசோதனை செய்த போது குழந்தைக்கும், தாய்க்கும் தொற்று உறுதிப் செய்யப்பட்டுள்ளது.

இதற்க்கு காரணமான மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு குழந்தையின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments