ஊரடங்கு முடிந்த பின்னர் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் - மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தல்
ஊரடங்கு முடிந்த பின்னர், மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வெளியே வருவதை தடுப்பதற்கான திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என்று முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
வீடியோகான்பரன் மூலம் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா பரிசோதனைகளை செய்வது, பாதித்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது, தொடர்பில் இருந்தவர்களை தனிமை கண்காணிப்பில் வைப்பதில் அடுத்த சில வாரங்களுக்கு மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை வசதிகளை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஊரடங்கை தீவிரமாக மாநில அரசுகள் அமல்படுத்துவதோடு, சமூக விலகியிருத்தலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். ஊரடங்கு முடிந்த பின்னர் வழக்கம்போல எல்லாம் இயங்க அனுமதிக்கக் கூடாது என்றும், மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வெளியே வருவதை தடுப்பதற்கான திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் ஒருசேர வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
Comments