இணைய வழியாக மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் - சென்னைப் பல்கலை. துணைவேந்தர் உத்தரவு
இணையம் வழியாக மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் நடப்பு பருவத்துக்குரிய பாடங்களை வீடியோவாகப் பதிவு செய்து கூகுள் டிரைவ், வாட்ஸ் அப் ஆகியவை மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் செயலியில் மாணவர்களைக் குழுவாக ஒருங்கிணைத்துப் பாடங்களை கற்றுத் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். ஸ்கைப், கூகுள் ஹேங் அவுட் ஆகியவை மூலமாகவும் பாடங்களைக் கற்பித்து அக மதிப்பீட்டுத் தேர்வுகளை இணையவழியில் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
Comments