பிளஸ்- 1, பிளஸ்- 2 விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

0 2411

வருகிற 7 - ம் தேதி துவங்குவதாக இருந்த பிளஸ் -1 மற்றும் பிளஸ்- டூ விடைத்தாள் திருத்தும் பணிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதனை, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி, அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பிளஸ் -டூ பொதுத் தேர்வு முடிவுகள், வருகிற 24 ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டி ருந்தது.

இதேபோல, பிளஸ் - ஒன் தேர்வு முடிவுகள், மே 14 ம் தேதி வெளியிட, திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் பிளஸ்- டூ தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்த போதிலும், பிளஸ் - ஒன் தேர்வில், ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, பொதுத்தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments