உடல் பாதுகாப்புக் கவசம், முகக்கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு என அமைச்சரிடம் மருத்துவர்கள் முறையீடு

0 1181

உடல் பாதுகாப்புக்கான கவசம், முகக்கவசம் ஆகியவற்றுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம் இந்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான செயல்பாட்டில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக அமைச்சர் ஹர்சவர்த்தன் டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் இந்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, உடல் பாதுகாப்புக் கவசம், என் 95 முகக்கவசம் ஆகியவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி தடைபட்டதாலேயே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதால், அடுத்த பத்துப் பதினைந்து நாட்களில் இவை கிடைக்கத் தொடங்கிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments