டிவிஎஸ் வாகன விற்பனை 55 சதவீதம் சரிவு

0 1710

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை மார்ச் மாதத்தில் 55 விழுக்காடு சரிவடைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 323 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 44ஆயிரத்து 739 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 55 விழுக்காடு குறைவாகும்.

இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 57 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 76 ஆயிரத்து 405 வாகனங்களை ஏற்றுமதி செய்த டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச்சில் 50 ஆயிரத்து 197 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 34 விழுக்காடு வீழ்ச்சியாகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தால் உற்பத்தியும் விற்பனையும் குறைந்துள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments