அதிகரிக்கும் கொரோனா பலி: திணறும் உலக நாடுகள்

0 5865

உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்தையும், பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் அதிகபட்சமாக ஒரே நாளில் 616 பேர் பலியாகியுள்ளனர். இதற்கடுத்து பெல்ஜியத்தில் 183 பேரும், ஈரானில் 124 பேரும் கொரோனாவுக்கு உயிரை பறிகொடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் 11 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பாகிஸ்தான் மற்றும் தென் கொரியாவில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையும் சேர்த்து, உலகில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 48 ஆயிரத்தை (48,200) தாண்டியுள்ளது.

இதேபோல் உலகில் மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்பெயினில் அதிகபட்சமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஈரானில் 2 ஆயிரத்து 900 பேருக்கும், பெல்ஜியத்தில் ஆயிரத்து 400 பேருக்கும், ரஷ்யாவில் 780 பேருக்கும், சுவிட்சர்லாந்தில் 350 பேருக்கும், அமெரிக்காவில் 340 பேருக்கும், மலேசியாவில் 200 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோல மேலும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டோரையும் சேர்த்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகில் 2 லட்சத்து 3 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து 6 லட்சத்து 99 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் நிலையில், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments