ஒத்திவைக்கப்பட்ட 3 மாதம் கடன் தவணைத் தொகைக்கு அபராத வட்டி வசூலிக்கக் கூடாது
கொரோனா பாதிப்பை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட 3 மாதம் கடன் தவணைத் தொகைக்கு அபராத வட்டி வசூலிக்கக் கூடாது என வங்கிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உதாரணமாக 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றவர் மாதத் தவணை 28,500 ரூபாய் என்ற வகையில் 3 மாதங்களுக்கு கட்டாமல் இருக்கும் 85,500 ரூபாய் அசலுடன் சேர்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு தவணை செலுத்த வேண்டியிருந்தால் விடுபட்ட தவணைத் தொகைக்கும் சேர்த்து 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
3 மாதங்கள் கட்டாத தொகையையும் வசூலித்து கூடுதல் வட்டியையும் வசூலிப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தத்துவத்தின் அடிப்படைக்கே எதிரானது என்று தெரிவித்துள்ள அவர், தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்யவும், கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட கோரியுள்ளார்.
Comments