கொரோனாவின் உண்மையான பாதிப்பு, பலி எண்ணிக்கை சீனாவால் மறைப்பு ?
கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாகவும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை என தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கை மிகவும் ரகசியமானது என்பதால் முழு விவரங்கள் தெரியவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரசு அதிகாரிகளே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
Comments