டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய சுமார் 9,000 பேருக்கு கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயம்

0 9242

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய சுமார் 9 ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய 24 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 பேருக்கும், ஆந்திரத்தில் 71 பேருக்கும், தெலுங்கானாவில் 28 பேருக்கும், அசாமில் 13 பேருக்கும், மகாராஷ்டிராவில் 12 பேருக்கும், புதுச்சேரி மற்றும் குஜராத்தில் தலா 2 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments