பயணச்சீட்டு முன்பதிவு - ரயில்வே விளக்கம்

0 11669

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மீண்டும் தொடங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையுள்ள காலத்துக்கு அனைத்துப் பயணியர் ரயில்கள், விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்தக் காலக்கட்டத்துக்குரிய முன்பதிவு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

120 நாட்கள் என்கிற காலவரம்புக்கு உட்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குப் பிந்தைய நாட்களுக்கு ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

ரயில்வே பயணச்சீட்டு கவுன்டர்கள், முன்பதிவு கவுன்டர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிந்தைய காலத்துக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவே இல்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments