மோட்டார் வாகன இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மோட்டார் வாகன இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் அவகாசத்தை ஏப்ரல் 21 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
பிரிமியம் தொகை செலுத்தாதோருக்கு முன்கூட்டியே காப்பீட்டு பலன் அளிக்கக் கூடாது என 1938ம் ஆண்டு காப்பீட்டு சட்டத்தின் 64 பி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பிரிமியம் தொகை செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே அமலில் இருக்கும் மோட்டார் வாகன இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் அவகாசத்தை ஏப்ரல் 21 வரை நீட்டிக்கும் வகையில் அந்த பிரிவில் மத்திய நிதியமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலத்தில் இன்சூரன்ஸ் காலாவதியாகும்பட்சத்தில், பிரிமியம் செலுத்தாதபோதிலும், அதற்கான பலன்களை பெறலாம் என ஐஆர்டிஏஐ (IRDAI)அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comments