பெய்ஜிங், சாங்காய் நகரங்களில் கொரோனா 2வது அலை பரவலைத் தடுக்க சீன அரசு கடுமையான நடவடிக்கை
பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா 2வது அலை பரவாமல் இருக்கச் சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவில் எண்பதாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா வைரஸ் தாக்கியதில் மூவாயிரத்து 312 பேர் உயிரிழந்தனர். அதன்பின் உலக நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில், சீனாவில் அதன் பரவலும் பாதிப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பெய்ஜிங் விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் இருந்து விமானங்களிலும், ரயில்களிலும் பெய்ஜிங், சாங்காய் நகரங்களுக்கு வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைக் கண்காணிப்பில் வைக்கின்றனர்.
Comments