ரஷ்யாவிடம் இருந்து வென்டிலேட்டர், மருத்துவப்பொருட்கள் வாங்க அமெரிக்க சம்மதம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினுடன் கடந்த 30 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி நியூயார்க் நகருக்கு வென்டிலேட்டர்கள்,மருத்துவப்பொருட்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுபோல் கடந்த நெருக்கடி காலங்களில் இருநாடுகளும் உதவிக்கொண்டுள்ளன என்றும் எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புவதாகவும் மோர்கன் கூறினார்.
Comments