நலவாழ்வுத்துறைப் பணியாளர்கள் மீது கற்களை வீசியெறிந்த ஊர்மக்கள்
மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் ஆய்வுக்காகச் சென்ற நலவாழ்வுத்துறை அலுவலர்கள் மீது கற்களை வீசிஎறிந்து ஊர்மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு செய்து வருகின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இதுபோல் மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டம் தத்பட்டி பாகல் என்னுமிடத்தில் ஆய்வுக்காகச் சென்ற நலவாழ்வுத்துறை அலுவலர்களைப் பொதுமக்கள் கற்களை வீசியெறிந்தும் தகாத சொற்களால் பேசியும் விரட்டியடித்துள்ளனர்.
Comments