தனிமைச் சிறையில் தம்மை அடைத்துக் கொண்டார் புதின்

0 2310

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மருத்துவ நிபுணருடன் கைகுலுக்கியதற்காக ரஷ்ய அதிபர் புதின் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருக்கும் அந்த தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 24ம் தேதி மாஸ்கோவில் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொண்ட புதினை அரசின் முதன்மை மருத்துவ ஆலோசகரான டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோ என்பவர் சந்தித்தார்.

அவர் புதினுடன் கைகுலுக்கி நெருக்கமாக நின்று பேசியுள்ளார். பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குள்ளானார். அவரால் புதினுக்கும் பரவியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் தற்போது புதினும் தமது வீட்டுக்குள் தனிமைச் சிறையை வலியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments