விளையாடிய கொண்டிருந்த சிறுவனை சுட்டுக் கொன்ற போலீசார்...மன்னிப்புக் கோரிய அதிபர்
கென்யாவில் ஊரடங்கின் போது வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கென்யாவில் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி போலீசார் அவனைச் சுட்டுக் கொன்றனர். போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவன் கொல்லப்பட்ட விஷயத்தில் போலீசார் வரம்புமீறி செயல்பட்டதாகவும், அதற்காக தான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் கென்ய அதிபர் உகுரு கென்யாட்டா தெரிவித்துள்ளார்.
Comments