தும்மும்போது 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ் கிருமி

0 7217

தும்மும் போது கொரோனா வைரஸ் கிருமிகள் 8 மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதாக கண்டறியப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளி குறித்து, உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் நோய் தொற்று தடுப்பு முகமையும் நெறிமுறைகளை வகுத்துள்ளன.

மாசசூட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் குறித்து, ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன் என்ற இதழில் எம்.ஐ.டியின் இணை பேராசிரியையும், திரவ இயக்கவியல் நிபுணருமான LYDIA BOUROUIBA என்பவர், எழுதி உள்ள கட்டுரையில், ஒருவர் தும்மும்போது, வைரஸ் கிருமிகள் குறைந்த பட்சம் 7 மீட்டர் முதல் 8 மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என சுட்டிக்காட்டி உள்ளார்.

அதாவது, 23 அடி முதல் 27 அடி வரை, பரவும் வைரஸ் கிருமி, சில மணி நேரம் வரை காற்றில் பரவி இருக்கும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க குறைந்தபட்சம் 6 அடி தூரம் - அதாவது 2 மீட்டர் தூரம் வரை தள்ளி இருக்குமாறு,அமெரிக்க பேராசிரியை LYDIA BOUROUIBA அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments