வீட்டை விட்டு வெளியேறி., மரணத்தை நேருக்கு நேர் சந்திக்காதீர்: ஏ.பி.சாஹி
ஊரடங்கை மீறி, வெளியில் நடமாடுவதால், நமக்குத் தெரியாமல், கொரோனா வைரஸின் பலத்தை, நாம் அதிகரிக்கிறோம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி (A.P.Sahi) எச்சரித்துள்ளார்.
"பயணம் தொடங்கியது" எனத் தலைப்பிட்டு, பொதுமக்களுக்கு, தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரசை குறைத்து மதிப்பிட்டதால் பல வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நடமாட்டமும், தொடர்பும் தான் இந்த வைரஸ் பரவக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பது தான் விவேகமானது என்ற சாணக்கியரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.
லட்சுமண ரேகையை வரைந்து அதற்குள் அடைபட்டுக் கிடப்பதே அறிவுடைய செயல் எனக் கூறியுள்ள தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்… மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
Comments