டெல்லி அரசின் கட்டுப்பாடுகளை மீறியதாக தப்லீக் ஜமாத்தினர் மீது வழக்கு

0 1446

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்க டெல்லி அரசு மேற்கொண்ட கட்டுப்பாடுகளையும், உத்தரவையும், தப்லீக் ஜமாத்தினர் மீறியதாக கூறி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேசமயம் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்ததே பலர் டெல்லியில் தங்கியிருக்க காரணம் என தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த நிலையில், மர்கசில் இருந்து 1000 பேரை வெளியேற்ற அனுமதி கோரி தப்லீக் நிர்வாகம் அளித்த கடிதத்திற்கு டெல்லி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என செல்லப்படுகிறது.

இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்பேரில், நிசாமுதீன் நிலைமையை லாவகமாக கையாண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்திடம் நிலைமையை விளக்கி கூறி, அங்கிருந்தவர்களை கொரோனா சோதனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments