144 தடை உத்தரவை மீறியதற்காக தமிழகம் முழுவதும் 1,25,793 பேர் கைது

0 3391

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 7 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் 7 நாட்களில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரத்து 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 25 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதோடு, 39 லட்சத்து 36 ஆயிரத்து 852 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments