உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கான தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு

0 10151

தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு சிலிண்டர்களுக்கான மொத்த தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு தலா ஒரு சிலிண்டர் வீதம் முன்று சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அது குறித்து பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், தமிழகத்தில் சுமார் 30-லட்சம் பயனாளிகள் உள்ளதாக தெரிவித்தனர்.

ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் சிலிண்டருக்கான தொகையை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக டெப்பாசிட் செய்யவுள்ளதாக கூறிய அதிகாரிகள், ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகள் இந்த பணத்தை பயன் படுத்தி சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments