ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பில்லை

0 3279

மார்ச் 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என கேள்வியெழுந்தது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை (The Department of Personnel and Training ) அனுப்பியுள்ள கடிதத்தில், 31ம் தேதியுடன் ஓய்வு பெறுவோர், அதே நாளில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக அலுவலகத்தில் இருந்து பணியாற்றினாலும், வீடுகளில் இருந்து பணியாற்றினாலும் இது பொருந்தும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments