தமிழகத்தில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 473 பேரிடம் கொரோனா அறிகுறி உள்ளதா என ஆய்வு
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் சுமார் 6 லட்சத்து 88 ஆயிரம் பேரிடம் கொரோனா அறிகுறி உள்ளதா என்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நேற்று வரை 3,698 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதாகவும், ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 815 வீடுகளில், 6 லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments