பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு

0 1667

பிரதமரின் நல நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிப்பது உட்படப் பல்வேறு அவசரச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிதிச் சலுகைகளையும் உதவிகளையும் அறிவித்தது. வரிகளைச் செலுத்துவதற்கு 3 மாதக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி, சரக்கு சேவை வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்ய ஜூன் 30ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நலநிதிக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச் சட்டம் 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மொத்த வருமானத்தில் 10 விழுக்காடு கழித்து வரி கணக்கிடும் சலுகை இந்த நன்கொடைக்குப் பொருந்தாது. இந்தச் சலுகைகள், கால நீட்டிப்பு ஆகியவற்றுக்கான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments