கொரோனா பரவலை தடுக்க வீடு தேடி சென்று காய்கறிகள் விற்பனை
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பேரூராட்சி சார்பில் 150 ரூபாய்க்கு 12 வகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பு பைகள் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் விதமாக வீடு தேடி சென்று காய்கறிகளை விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார்.
அதன்படி பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் தக்காளி, வெங்காயம், கத்தரி, முள்ளங்கி, வெண்டை, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 12 வகையான காய்கறிகள் அடங்கிய 5 கிலோ எடைக் கொண்ட தொகுப்பு பை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Comments