கொரோனா பரவலின் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் சரிவு
கொரோனா எதிரொலியாக தொடரும் ஊரடங்கு உத்தரவால் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன.
நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் முடங்கியதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 203 புள்ளிகள் வரை சரிந்து 28,265 ஆக நிறைவுபெற்றது.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 343 புள்ளிகள் சரிந்து 8253புள்ளிகளில் நிறைவடைந்தது. எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலை 5 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 67 காசுகளாக இருந்தது.
Comments