அலைமோதிய மக்கள் கூட்டத்தால் காய்கறி, உணவுப் பொருட்கள் விற்கும் சந்தை பிற்பகல் 3 மணி வரை திறப்பு

0 1035

காய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்கிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மங்களூரில் உள்ள சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

கர்நாடகத்தில் துறைமுக நகரான மங்களூரில் பொதுமக்களின் வசதிக்காகக் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காய்கறி, உணவுப் பொருட்கள் சந்தை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருட்களை வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்றனர். அதேநேரத்தில் ஒருசிலர் போதிய இடைவெளிவிட்டு வரிசையாக நின்று அமைதியாகப் பொருட்களை வாங்கிச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments