குடியை விட முடியாமல் தவிக்கும் குடிப்பிரியர்களுக்கு சிறப்பு பாஸ்
குடியை விட முடியாமல் தவிக்கும் குடிப்பிரியர்களுக்கு மருத்துவர்களின் சிபாரிசின் பேரில், மதுபானம் வாங்க கேரள அரசு சிறப்பு பாஸ் வழங்குகிறது.
இதுகுறித்த கடந்த திங்களன்று அரசு பிறப்பித்த உத்தரவில் சிறப்பு மதுபான பாஸ் பெற விரும்பும் குடிமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற ஏதாவது ஒன்றை அணுகி இவர் குடிப்பழக்கத்தை விட்டதால், பக்க விளைவுகளை சந்தித்து வருபவர் என்பதற்கான டாக்டர் பரிந்துரையை பெறவேண்டும்.
அதோடு அரசு அளித்து இருக்கும் அடையாள அட்டையையும் சேர்த்து, வணிக வரித்துறை அலுவலகத்தில் கொடுத்தால் சிறப்பு மதுபான பாஸ்கள் வழங்கப்படும்.
அதை கூட்டுறவு சங்க அங்காடிகளில் காட்டி குடிப்பிரியர்கள் மது வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த முடிவுக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
Comments