மகாராஷ்ட்ராவில் கொரோனாவால் ஒரே நாளில் 59 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்ட்ராவில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்து இந்தியாவிலேயே அதிக பாதிப்புடைய மாநிலம் என்று கருதப்படுகிறது.
ஆனால் இதற்காக கவலைப்பட வேண்டாம் என அரசு அதிகாரிகள் நம்பிக்கையளித்து வருகின்றனர். இதுவரை மகாராஷ்ட்ராவில் 8 பேர் உயிரிழந்ததாக அரசு உறுதி செய்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவை தனியார் பரிசோதனைக் கூடங்கள் அளித்துள்ள தகவலின்படி கணக்கிடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் மும்பையை விட்டு வெளியேறுவதைத் தடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
அனைவருக்கும் உணவு அடைக்கலம் அளிக்கப்படும் என்றும் மகாராஷ்ட்ர அரசு உறுதியளித்துள்ளது.
இதனிடையே மும்பை நகர எல்லையான பீவண்டியில் காவல்துறையினர் ஊரடங்கை மீறிய வாகனங்களை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்தனர்.
Comments