வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்து வசதிகள் கிடைக்க ஏற்பாடு-அமைச்சர் தங்கமணி

0 1199

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று ஊரடங்கு உத்தரவால் திரும்பி வரமுடியாமல் தவிப்பவர்களுக்கு தங்குமிடம் மற்றும் 3 வேளை உணவு கிடைப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்தார்.

குமாராபாளையத்திலிருந்து காசி சென்று திரும்பி வரமுடியாமல் தவிப்பவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் 94439 43699 என்ற தனி வட்டாட்சியரின் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments