மகாராஷ்டிராவில் தொழில்துறையினருக்கான மின்சார கட்டணத்தில் 8 விழுக்காடு குறைப்பு-உத்தவ் தாக்ரே
மகாராஷ்டிராவில், தொழில்துறையினருக்கான மின்சார கட்டணத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு, 8 விழுக்காடு வரையில் குறைத்து, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கான மின்சார கட்டணத்தில், ஒரு விழுக்காடு அளவிற்கு கட்டண சலுகை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளுக்கான மின்சார கட்டணத்தில், ஒன்று முதல் 2 விழுக்காடு வரையில், குறைக்கப்படுவதாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து, தொழில்துறையினரையும், விவசாயிகளையும், பொதுமக்களையும் மீட்டெடுக்க, இந்த மின்சார கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
Comments