மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மொட்டை அடித்துக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணியில் தான் அறிமுகம் ஆன போது இது போல் மொட்டையடித்துக் கொண்டதை நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், இந்த சவாலை மேற்கொள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு வார்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
Comments