அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அச்சம்

0 2285

அமெரிக்காவில் வேலையிழந்த வெளிநாட்டுப் பணியாளர்கள், நாட்டைவிட்டு வெளியேறும் காலத்தை 6 மாதமாக நீட்டிக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 170 ஆகியுள்ளது. முழு அடைப்பு கடைப்பிடிக்கப்படுவதால் மொத்தம் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

இவர்களில் 33 லட்சம் பேர் வேலையிழப்புக் காலத்துக்கான உதவி கோரி அரசிடம் பதிவு செய்துள்ளனர். எச் 1 பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலையிழந்த 60 நாட்களில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது விதியாகும்.

இந்நிலையில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏராளமானோர் வேலையின்றித் தங்கியிருக்கும் காலத்தை 60 நாட்களுக்குப் பதில் 6 மாதங்களாக நீட்டிக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments