மறுமுத்திரையிடாத எடையளவுகளை ஜூன் 30 வரை மறுமுத்திரையிட அனுமதி- தொழிலாளர் துறை அறிவிப்பு

0 940

மார்ச் 31ம் தேதி வரை மறுமுத்திரையிடாத எடையளவுகளை கூடுதல் கட்டணமின்றி, ஜூன் 30ம் தேதி வரை அந்தந்த பகுதி முத்திரை ஆய்வாளர், தொழிலாளர் துணை ஆய்வாளர்களிடம் மறு முத்திரையிட்டு கொள்ளலாம் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை ஆணையர் நந்தகோபோல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மார்ச் 31 வரை முத்திரையிடப்பட வேண்டிய எடைகள், அளவைகள், எலெக்ட்ரானிக் தராசுகள், எடை பாலங்கள், பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் பம்புகள், பெட்ரோல் டீசல் லாரிகள் மற்றும் இதர எடையளவு கருவிகள் மறுமுத்திரையிட இயலவில்லை என பல்வேறு தொழில் நிறுவன சங்கங்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அந்த சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஜூன் 30 வரை மறுமுத்திரையிட அனுமதி அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments