நிதியாண்டு 3 மாதங்களுக்கு நீட்டிப்பா? - மத்திய அரசு மறுப்பு
நிதியாண்டு 3 மாதங்கள் நீட்டிக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு உதவும் வகையில், ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் நிதியாண்டு நீட்டிக்கப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதை மறுத்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிதியாண்டு நீட்டிக்கப்பட இருப்பதாக சில ஊடகங்களில் பொய் செய்திகள் (fake news) வெளியிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முத்திரை சட்டத்தில் மேற்கொண்ட சில திருத்தங்கள் தொடர்பாக அரசால் நேற்று வெளியிடப்பட்ட அறிவிக்கை தவறாக எடுத்துரைக்கப்படுகிறது என்றும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
There is fake news circulating in some sections of media that the financial year has been extended. A notification issued by the Government of India on 30th March 2020 with respect to some other amendments done in the Indian Stamp Act is being misquoted: Ministry of Finance pic.twitter.com/tErIsLr9v1
Comments