அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபர்

0 6115

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு, கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் படி ஆட்சியர் தண்டனை வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் அவசர, அத்தியாவசிய தேவைக்காக 24 மணி நேர இலவச உதவி எண் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது வீட்டிற்கு 4 சமோசாக்களை அனுப்பும் படி ஒருவர், அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 சமோசாக்களை அந்த நபரின் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்ட ராம்பூர் ஆட்சியர், பொது சேவையை தவறாக பயன்படுத்தியதாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் சேர்ந்து அனுப்பினார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments